Sunday, June 6, 2010
http://tamil.galatta.com/entertainment/events/gallery/name/images/id/2947/star/Ochaayi-Trailer-Launch.html
Friday, May 21, 2010
Monday, May 17, 2010
Thursday, May 13, 2010
Tuesday, May 11, 2010
Sunday, May 9, 2010
மீண்டும் திரையில் ஒமுரு!

"பருத்தி வீரன்' படத்தில் ப்ரியாமணியை பாலியல் பலாத்காரம் செய்யும் லாரி ஒட்டுனர் வேடத்தில் நடித்தவர் ஒமுரு. அதன் பிறகு "மதுரை சம்பவம்' படத்தில் அவ்வப்போது தத்துவங்களை பேசிவிட்டு செல்லும் மனநோயாளி வேடத்தில் நடித்தவர் இப்போது, ஜீவன் இயக்கி வரும் "மயிலு' படத்தில் "சல்லவாரி' என்ற பாத்திரத்திலும், ஆசைத்தம்பி இயக்கும் "ஒச்சாயி' படத்தில் "ஏழரை' எனும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தினமணி - பாலா
தயாராகிவரும் "ஒச்சாயி" திரைப்படம்

ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் திரவியபாண்டியன் தயாரிக்கும் முதல் படம் 'ஒச்சாயி'.
யார்கண்ணன்மற்றும்பல இயக்குனர்களிடம் துணை-இணைஇயக்குனராக பணிபுரிந்த ஓ.ஆசைத்தம்பி, இந்தப் படத்தின கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
யார்கண்ணன்மற்றும்பல இயக்குனர்களிடம் துணை-இணைஇயக்குனராக பணிபுரிந்த ஓ.ஆசைத்தம்பி, இந்தப் படத்தின கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
பெற்றோர்கள் செய்யும் தவறால் பிள்ளைகளின் வாழ்க்கை எப்படி தடம் மாறி, தறிகெட்டு போகிறது என்பதை எடுத்துச்சொல்லும் இந்தப் படத்தில் கதையின் நாயகனாக புதுமுகம் தயா நடிக்க, அவருக்கு ஜோடியாக தாமரை நடித்துள்ளார். இவரும் புதுமுகமே. இவர்களுடன் சந்தானபாரதி, கஞ்சாகருப்பு, ஷகீலா ஆகியோர் நடிக்க, தயாரிப்பாளர் திரவியபாண்டியன், சாந்தினி, ஒமுரு, உஸ்மான், உசிலைபாரதி என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். மண்ணையும் மக்களையும் கண்முன் நிறுத்தும் படைப்பு என்பதால், கதைக்கு பொறுத்தமான நடிகர்களையே அதிகம் அதிகம் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளேன் என்கிறார் இயக்குநர் ஆசைத்தம்பி.
படத்தைப் பற்றி அவர் கூறுகையில் "ஒச்சாயி என்பது ஒச்சாண்டம்மன் தெய்வத்தின் பெயர். மதுரை மாவட்டம் கள்ளர் சமுதாயத்தின் குலதெய்வம். முக்குலத்தோரின் மூத்த கடவுள். மதுரை மீனாட்சி அம்மன் மனித பிறப்பெடுத்து குழந்தை இல்லாத தடியன் தம்பதிக்கு வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்து, பருவயதில் தன்னை தெய்வமாக, அனைவருக்கும் தெரியவைத்து, மறைந்த நொச்சியம்மா - காலப்போக்கில் ஒச்சாயி என்று மாறி, பிறகு ஒச்சாண்டம்மானாக கருமருத்தூரிலும், பாப்பாபட்டியிலும் மற்றும் பல கிராமங்களிலும் சாதிமத பேதமின்றி வழிபடும் தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
தெய்வ பக்தியாக அந்த சமுதாயத்தில் தலபிள்ளை ஆண் குழந்தை என்றால் ஒச்சாத்தேவன், ஒச்சப்பன் என்றும், பெண் குழந்தை என்றால் ஒச்சம்மா, ஒச்சாயி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வருகிறது. அப்படி பெயர் வைத்து வாழ்ந்த ஒரு பெண்ணின் பெயர்தான் ஒச்சாயி.
ஒச்சாயி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும், அதனால் ஏற்படுகிற பாதிப்புகளும்தான் படம். அந்த பரபரப்பான சம்பவங்களும், விறுவிறுப்பான திரைக்கதையும், யதார்த்தமான வசனங்களும் என, இயல்பான நடிப்போடு படமாக உருவாகிறது. இந்த கதை தற்போது வாழ்ந்துவரும் மனிதர்களின் வாழ்க்கை பதிவு என்று சொல்லாம்..
உண்மை சம்பங்கள் என்றுமே தோற்காது. உண்மைக்கு வலிமை அதிகம். அதனால் எனது முதல் படத்தை உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கிறேன். இதில் உன்மையான, அன்பும், ஏக்கமும், ஏமாற்றமும், தவிப்பும், தவறும், கோபமும் என வாழ்க்கையில் நம்மிடம் உள்ள அத்தனை உணர்வுகளும் சரியானபடி வெளிப்ட்டு இருக்கிறது. ஆழமான கருத்தும், அழுத்தமான திரைக்கதையும் இந்தப் படத்தை பார்க்க வைக்கும். எல்லோரும் கதைக்கான முகங்களாக தேர்வு செய்து நடிக்க வைத்திருப்பதால் எல்லோரும் கதையோடு ஒன்றிப்போய் பார்க்கிற வாய்ப்பை பெருவார்கள். யாருமே நடித்தது மாதிரி இருக்காது. வாழ்ந்தது போல இருக்கும்.
நல்ல படங்களை வரவேற்கும் தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும். அவர்களின் மனதை தொடவே, அவர்களின் வாழ்க்கையை படமாக பதிவு செய்திருக்கிறேன். உண்மை சம்பவம் என்பதால் கமர்சியல் இருக்காது என்று என்ன வேண்டாம். கதையே கமர்சிலாக அமைந்து எங்களை வேலை வாங்கியிருக்கிறது. பெத்தவுங்க என்ன பாவம் செய்தாலும் அது பிள்ளைங்க வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை உணர்த்தும் இநத் படைப்பு. அதனால் ஒவ்வொரு பெற்றோருக்கும் இந்தப் படம் ஒரு நல்ல அனுபவமாக, தங்களை சரியான படி தயார்படுத்திக்கிற படமாக இருக்கும். இன்றைய இளைஞர்கள் கூட நாளைய பெற்றோர்கள். அதனால் அவர்களுக்கு நேர்மையான வாழ்க்கையை எப்படி வாழ்வது என புரியவைக்கும் ஒரு கண்ணாடியாக இந்தப் படம் இருக்கும். அப்படி ஒரு உணர்வு ரீதியான படம்.
இந்தப் படத்திற்கு ஜீவராஜா இசையமைக்க, சினேகன் பாடல்களை எழுதி உள்ளார். சிவசங்கர். வாமன் மாலினி, ரவிதேவ் ஆகியோர் நடன காட்சிகளை அமைத்துள்ளனர். சண்டைக் காட்சிகளை ஆக்ஷன் பிரகாஷ் அமைத்திருக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவர் பிரோம் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.சசிக்குமார் எடிட்டிங் செய்துள்ளார். நிர்வாகத் தயாரிப்பு - ஒமுரு. மக்கள் தொடர்பு- ஜி.பாலன்.
Posted by G.BALAN FILM PRO, at 8:24 AM 0 comments
Friday, May 7, 2010

திரை ப்பட நடிகர் ஒமுரு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா உ.புதுக்கோட்டைகிராமத்தில் பிறந்தவர். முதுநிலை இதழியல் பட்டம் பயின்றவர். சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களை வீதி நாடங்கள் மூலம் மதுரை மாவட்டத்தின் பல்வேறுகிராமங்களில் நடத்தியவர். பத்திரிக்கைதுறையில் தன்னை ஈடுபடுதிக்கொண்டும் சேவை புரிந்துவர்கிறார். கலைத்துறையில் தனக்கு இருந்த ஆர்வத்தால் "பருத்திவீரன், ஜெயம்கொண்டான், மதுரைசம்பவம் ,மயிலு போன்றதிரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஒச்சாயி படத்தின் நிர்வகதயரிப்பாளராகவும் அப்படத்தின் முக்கிய கதா பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
Subscribe to:
Comments (Atom)







